தமிழகத்தில் சட்டமன்றத்தேர்தலுக்கான தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே அரசியல் கட்சிகள் பிரச்சாரம்,கூட்டணி என பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியிருந்தன. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 26 அன்று சட்டமன்றத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல், வாக்கெடுப்பு, வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றுக்கான தேதிகள்அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடைமுறைகளும் அமலுக்குவந்தது. தற்போது அரசியல் கட்சிகள் கூட்டணிக்கானதொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.
அதனையடுத்து பிப்ரவரி 27 அன்றுமூத்த அரசியல்வாதி பழ.கருப்பையாமக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார்.அதேபோல்சட்டப்பஞ்சயாத்து இயக்கமும் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்திருந்தது. இந்நிலையில் தற்போது சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம்கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசுகையில், ''முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ்மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவராக டாக்டர் மகேந்திரனைஉங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். அதேபோல்இவரையும் மக்கள் நீதி மய்யத்தின்துணைத் தலைவராகஉங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். கலாம் என்ற பெயரை திருப்பிப்போட்டால் கிட்டத்தட்டஎன் பெயரும் வரும்'' என்றார்.