Advertisment

ம.நீ.மய்யத்தில் இணைந்த பொன்னுசாமி

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் நிறுவனர் மற்றும் மாநில தலைவரான சு.ஆ.பொன்னுசாமி, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார்.மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிலாளர் அணி "மாநில செயலாளராக" சு.ஆ.பொன்னுசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

MNM

இதுதொடர்பாக சு.ஆ.பொன்னுசாமி கூறியுள்ளதாவது,தொழிலாளர் அணி மாநில செயலாளராக என்னை நியமித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பொதுவாழ்க்கையில் பல ஆண்டுகள் இருந்தாலும் கூட இது வரை எந்த கட்சியிலும் உறுப்பினராக சேராத நான் தற்போது மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

பால் முகவர்கள், தொழிலாளர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் நலனிற்காக துவங்கப்பட்ட சங்கத்தின் தலைவராக இருந்தாலும் கூட இதுவரை இந்த சமூகத்தின் மீதும், தேசத்தின் மீதும் அக்கறை கொண்டு கிஞ்சித்தும் சுயநலமின்றி, தொடர்ந்து பொதுநலனோடு செயல்பட்டு வந்த என்னை மக்கள் நலப் பணியாற்றிட களத்திற்கு வாருங்கள் என நேரில் அழைத்து, பொதுவாழ்வில் அடுத்த அத்தியாயத்தை எழுதிடும் பொறுப்பை வழங்கி, இணைந்து செயல்பட "உங்களாலும் முடியும் என்கிற கூடுதல் நம்பிக்கையை தந்திருக்கிறார்". அதற்காக அவருக்கும், கட்சியின் மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் இந்த நேரத்தில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். இவ்வாறு கூறியுள்ளார்.

kamalhaasan MNM
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe