Advertisment

'ராஜாஜி, ஜெயலலிதாவை மிஞ்சுகிற நினைவாற்றல் மன்னனாம் எடப்பாடி'- புகழ்ந்து தள்ளிய பொன்னையன்!

Ponnaiyan praised EPS

அண்மையில் அதிமுக மூத்த நிர்வாகி பொன்னையன் அதிமுக நிர்வாகி நாஞ்சில் கோலப்பன் என்பவருடன் எடப்பாடி பழனிசாமி குறித்தும், அவரது தரப்பு ஆதரவாளர்களான சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட பலர் குறித்தும் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் அது தனது குரல் அல்ல என பொன்னையனும், பேசியது பொன்னையன்தான் என அவருடன் பேசிய கோலப்பனும் தெரிவித்திருந்தனர்.

Advertisment

Ponnaiyan praised EPS

இந்நிலையில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பொன்னையன், ''அரசியலில் வோட் பாங்க் என்பதற்காக கள் பானத்திற்கு ஒப்புதல் இல்லாமல் இருக்கிறது. உழவர்கள் கையில் தமிழகம் வர வேண்டும். அதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். அவரை பார்த்து சாதாரணமாக குடியானவன் என்று நினைக்கலாம். அப்படி இல்லை. ஒரு மணி நேரம் மைக்கை பிடித்து பேசினார் என்றால் புள்ளிவிவரங்கள் இல்லாத பேச்சை அவரது பேச்சில் நீங்கள் கேட்க முடியாது. ஒரு கொடியே 34 லட்சத்து 346 ரூபாய் என இருந்தால் அதை அப்படியே பேப்பர் இல்லாமல் பேசுவார். அவ்வளவு நினைவாற்றல் எடப்பாடி பழனிசாமிக்கு. நாங்கள் இளம் வயதிலேயே ராஜாஜியுடன் பழகி இருக்கிறோம். அளப்பரிய நினைவாற்றல் கொண்டவர். போன் நம்பரை கூட அப்படியே சொல்வார். அதற்கடுத்து ஜெயலலிதாவிற்கு நினைவாற்றல் அதிகம், கண்கூட பார்த்தோம். அவர்கள் இருவரையும் மிஞ்சுகிறவராக நினைவாற்றல் மன்னனாக இருக்கக் கூடியவர் எடப்பாடி பழனிசாமி'' எனப் புகழ்ந்தார்.

Advertisment

Ponnaiyan admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe