புதுச்சேரி மாநில சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தனது துறை சார்ந்த மக்கள் நலத்திட்டக் கோப்புகள் தொடர்பான பணிகளுக்காக, துணைநிலை ஆளுநரின் அழைப்பிற்காக புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் 8-ஆவது நாளாக உள்ளிருப்பு அறவழி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு ஆதரவாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் முதல்வர் நாராயணசாமி, பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம், காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியம், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக கண்டன உரையாற்றினார்கள்.