புதுச்சேரி கிருமாம்பாக்கத்தை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் வீரப்பனின் மைத்துனர் சாம்பசிவம் (35). கூட்டுறவு துறை அமைச்சர் கந்தசாமியின் தீவிர ஆதரவாளர் இந்த சாம்பசிவம். அமைச்சர் கந்தசாமியின் பிறந்தநாளை கிருமாம்பாக்கத்தில் இன்று கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். மேலும் தனது மகளின் முதலாவது பிறந்த நாளை ஒட்டி அப்பகுதியில் வேண்டியவர்களுக்கு பத்திரிகைகளை வைத்து வந்தார்.

Advertisment

 incident

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இன்று காலை பத்திரிக்கை வைக்க சென்று கொண்டிருந்தபோது அரசு நடுநிலைப் பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் அவர் மீது வெடிகுண்டை வீசியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சமயத்தில் அக்கும்பல் சாம்பசிவத்தை வெட்டிக் கொன்றுள்ளது.

பொதுமக்கள் முன்னிலையில், பட்டப்பகலில் நடந்த இந்தகொடுர கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது உறவினரான முன்னாள் கவுன்சிலர் வீரப்பன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இப்போது சாம்பசிவம் கொல்லப்பட்டது பழிக்குப் பழி கொலையாக இருக்கலாம் என்கிற கோணத்தில் கரிக்கலாம்பாக்கம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் புதுச்சேரி மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.