Skip to main content

இடைத்தேர்தலில் மாறி மாறி குற்றம் சாற்றும் தலைவர்கள்!  

Published on 09/10/2019 | Edited on 09/10/2019

புதுச்சேரி காமராஜ் நகரில் காங்கிரஸ், திமுக கூட்டணி சார்பில் ஜான்குமார் போட்டியிடுகிறார். என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கூட்டணி சார்பில் புவணேஸ்வரன் போட்டியிடுகின்றார். காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியும், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து முன்னாள் முதல்வர் ரங்கசாமியும் மற்றும் இவ்விரு கூட்டணி கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 

pondicherry election



பிரச்சாரத்தின் போது இன்னாள் முதல்வரும், முன்னாள் முதல்வரும் ஒருவர் ஒருவர் மாறி மாறி குற்றசாட்டுகளை அள்ளி வீசுகின்றனர்.

நேற்றைய பிரசாரத்தின்போது முதலமைச்சர் நாராயணசாமி, “காமராஜ் நகர் தொகுதியில் வெற்றி பெற்றால் ஆட்சி மாற்றம் என்கிறார் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி. புதுவையில் ஆட்சி அமைக்க வேண்டுமானால் 16 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு வேண்டும். ஆனால் எதிர்க்கட்சிகளின் பலம் 11 ஆகத்தான் உள்ளது. அதிலும் என்.ஆர்.காங்கிரசில் 7 எம்.எல்.ஏ.க்கள்தான் உள்ளனர். அவர் கணக்கு தெரியாமல் ஆட்சி மாற்றம் என்கிறாரா? அல்லது மக்களை ஏமாற்ற அப்படிச் சொல்கிறாரா? ஆட்சி மாற்றம் என்று அவர் அரைத்த மாவையே அரைக்கின்றார். அவரது கட்சியில் உள்ளவர்கள் வேறு கட்சிக்கு ஓடி விடக்கூடாது என்பதற்காக ஆட்சி மாற்றம் என்ற தேனை தடவுகின்றார். தேர்தல் முடிந்தவுடன் வீட்டுக்கு சென்றுவிடுவார். அவர் முதலில் எதிர்க்கட்சி தலைவர் போல் செயல்படுகிறாரா? தேர்தல் நேரத்தில் மட்டும்தான் மக்களை தேடி வருவார்.  சட்டமன்ற கூட்டம் நடக்கும்போதே வாட்ச் கடையில்தான் (கைக்கெடிகாரம்) உட்கார்ந்திருந்தார். அவரை எதற்காக மக்கள் தேர்வு செய்தனர்? ரங்கசாமி எதிர்க்கட்சி தலைவராக செயல்பட வேண்டும்ம், இல்லாவிட்டால் அந்த பதவியை ராஜினாமா செய்யவேண்டும்” என்று ரங்கசாமி மீது குற்றச்சாடுகளை அடுக்கினார்.

இதேபோல் ரங்கசாமி பிரச்சாரத்தின் போது, “ புதுவை அரசுக்கு இப்போதுள்ள அதிகாரம் தான் நாங்கள் ஆட்சியில் இருந்த போதும் இருந்தது. அதை வைத்துக்கொண்டுதான் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றினோம். கடைசி நேரத்தில் கூட வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக இலவச மிக்சி, கிரைண்டர் வழங்கினோம். சிலரிடம் வாக்குகேட்கும்போது, உங்களால்தான் எங்கள் பிள்ளை டாக்டர் ஆனார்கள் என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
 

pondicherry election



இந்த ஆட்சியில் புதிதாக என்ன திட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள்? தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. எதிர்க்கட்சிகள் தான் வழக்கமாக ஆளும் கட்சியை குறை சொல்லும். ஆனால் புதுவையில் ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சிகளை குறை கூறி காலத்தை கடத்தி வருகின்றனர். மக்களை பற்றி சிந்தித்து மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவது தான் ஆட்சியாளர்களின் வேலை. ஆனால் அந்த வேலையை இவர்கள் செய்வதில்லை. இந்த ஆட்சி எப்போது மாறும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது. மக்களுக்கு தேவையானதை செய்யாமல் எதிர்க்கட்சிகளை குறை சொல்வதை ஆளுங்கட்சியினர் நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என்று பதிலடி கொடுத்தார்.

முன்னாள், இன்னாள் முதல்வர்கள் இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் குற்றசாட்டுகளை கூறிக் கொண்டு வீடு வீடாக வாக்குகள் சேகரிப்பதை விந்தையாக பார்க்கின்றனர் புதுச்சேரி காமராஜ் தொகுதி மக்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேர்தல் பறக்கும் படை கலைப்பு; எல்லையில் மட்டும் கண்காணிப்பு

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Dissolution of Election Flying Corps; Surveillance only at the border

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகளின்படி ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கு தலா 3 பறக்கும் படைகள் வீதம் 8 சட்டசபை தொகுதிக்கும்,  24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. இது தவிர ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கூடுதலாக ஒரு பறக்கும் படை குழு இயங்கியது. இது தவிர வீடியோ கண்காணிப்புக் குழு, நிலை கண்காணிப்புக் குழு, பார்வையாளர்கள் உள்ளிட்டோருக்கு தனியாக குழு என 144 குழுக்கள் செயல்பட்டன.

ஓட்டு பதிவு நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்ததால் நேற்று காலை முதல் பறக்கும் படை, வீடியோ கண்காணிப்பு குழு, நிலை கண்காணிப்புக் குழு ஆகியவற்றை தேர்தல் ஆணையம் கலைத்து உத்தரவிட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, கோபி , பவானி சட்டசபை தொகுதிகளில் குழுக்கள் கலைக்கப்பட்டன.

அதேசமயம் பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட தாளவாடி, அந்தியூர் தொகுதிக்குட்பட்ட பர்கூர் ஆகியவை கர்நாடகா மாநிலத்தை ஒட்டி உள்ளது. கர்நாடகாவில் இன்னும் தேர்தல் முடியாததால் மாநில எல்லையை கண்காணிக்கும் வகையில் அந்தியூர் தொகுதியில் 3 பறக்கும் படை, பவானிசாகர் தொகுதியில் மூன்று பறக்கும் படையினர் மற்றும் எல்லை பகுதியில் சோதனை, வாகன சோதனையில் ஈடுபடுவார்கள் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.