Advertisment

எங்களுக்கு பல எதிர்ப்புகள் வரும், ஆனால்.... பொன்.ராதாகிருஷ்ணன் 

நாகர்கோவிலில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

Advertisment

அப்போது பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி உள்பட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அவர்,

Advertisment

அ.தி.மு.க. கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் எதிர்க்கட்சி தலைவர் முயற்சி தோல்வியில் முடியும். நாட்டின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணியில் சேருவார்கள். தே.மு.தி.க. விவகாரத்தில் இழுபறி நிலை ஏற்பட்டாலும் கூடிய விரைவில் நல்ல செய்தி வரும்.

pon radhakrishnan

தி.மு.க.வை முன்பு தாக்கி பேசிய வைகோ, தற்போது தி.மு.க.வை தாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் எங்களுக்கு பல எதிர்ப்புகள் வரும், ஆனால் மக்கள் தெளிவாக உள்ளனர். பிரதமர் மோடியின் மீது தமிழகத்தில் முன்பு இருந்ததை விட தற்போது பல மடங்கு செல்வாக்கு உயர்ந்து உள்ளது. குமரியில் ரூ.40 ஆயிரம் கோடி திட்டத்தை பற்றி குறை கூறும் நாங்குநேரி மண்ணில் இருக்கும் ஒருவருக்கு, குமரி மண்ணை பற்றி என்ன தெரியும். இவ்வாறு கூறினார்.

Alliance admk dmdk Pon Radhakrishnan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe