திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன்.
அப்போது அவர், தமிழ்நாட்டில் விவசாயிகளின் கடன்களையும், மாணவர்களின் கல்விக்கடன்களையும் தள்ளுபடி செய்வோம் என்று தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வாக்குறுதி அளித்தனர். இப்போது அக்கூட்டணியில் 37 எம்.பி.க்கள் இடம் பெற்றுள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Pon Radhakrishnan_0.jpg)
எனவே, தேர்தல் வாக்குறுதிப்படி, இன்னும் 6 மாத காலத்தில் வெற்றி பெற்ற 37 எம்.பி.க்களும் அவர்களின் சொத்துகளை விற்றாவது ஓட்டுப்போட்ட மக்களுக்கு விவசாய கடன்களையும், படிப்புக்காக மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன்களையும் அடைத்து கொடுத்தாக வேண்டும்.
தமிழகத்தில் குடிநீர் பிரச்சினையை எதிர்க்கட்சிகள் பூதாகரமாக்கி வருகிறது. அவர்கள் காலத்தில் செய்யக்கூடிய விஷயத்தை சொல்லாமல் புதிதாக ஒரு பிரச்சினையை கிளப்புவது அவர்களுக்கு வாடிக்கை. தண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் பொறுப்பு 50 ஆண்டுகளாக ஆண்டவர்களுக்கும் உண்டு. எனவே, குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டிய ஒன்று.
மேலும் தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் திறந்துவிடக்கோரி, 37 எம்.பி.க்களும் கர்நாடகாவில் நடைபெறும் கூட்டணி கட்சி அரசிடம் சென்று முறையிட வேண்டும். காவிரி தண்ணீரை பெற்றுத்தர மத்திய அரசு செய்யவேண்டிய பணிகளை கட்டாயம் செய்யும். இவ்வாறு கூறினார்.
Follow Us