கன்னியாகுமரி பாராளுமன்றத் தொகுதிக்கு பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று மதியம் 2 மணிக்கு குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

Advertisment

​pon radhakrishnan

​pon radhakrishnan

​pon radhakrishnan

Advertisment

பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராக 7வது முறையாக அவர் வேட்புமனு செய்வது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 6 முறை வேட்பாளராக போட்டியிட்டு, இரண்டு முறை வெற்றி கண்டார். தற்போது 7வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்திருககிறார். இதற்கு முன்பு 2011ல் நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் அதிமுக வேட்பாளர் நாஞ்சில் முருகேசனிடம் தோல்வி அடைந்தார்.

​pon radhakrishnan

pon radhakrishnan

Advertisment

இன்று வேட்பு மனு தாக்கல் செய்தவற்கு முன்னதாக காலையில் குமரி கத்தோலிக்க பேராயர் நசரேன் சூசையை சந்தித்து ஆசி பெற்றார். தொடர்ந்து வேட்புமனுவை மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வைத்து வழிபட்டார். பின்னர் நாகர்கோவிலில் உள்ள கட்சி அலுவலகத்தில் கூட்டணிக் கட்சிகளுடன் ஊர்வலகமாக வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார்.