விஜய்க்கு தொடர் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் அவரது வீட்டில் ரெய்டு நடத்தியது உள்நோக்கம் கொண்டது. இந்த மிரட்டலுக்கெல்லாம் விஜய் பயந்துவிட மாட்டார் என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நடிகர் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சி விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் இணைய நடிகர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்படுமா என கே.எஸ்.அழகிரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் மனதார ஏற்றுக்கொள்வோம். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு வர வேண்டும் என அழைக்கவில்லை என தெரிவித்தார்.

Advertisment

Pon Radhakrishnan about KS Alagiri and vijay

இந்நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், "நடிகர் விஜய் மீது காங்கிரஸ் கட்சிக்கு ஏதோ கோபம் இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு நடிகர் விஜய் வந்தால் வரவேற்போம் என்று கூறி தற்கொலைக்கு சமமான செயலை செய்யும் அளவிற்கு அவரை கே.எஸ்.அழகிரி தூண்டுகிறார்" என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.