Skip to main content

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிக இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும்: பொன்.ராதாகிருஷ்ணன்

Published on 14/07/2018 | Edited on 14/07/2018
pon radhakrishnan


நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிக இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 
 

திருச்சியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
 

அப்போது அவர் கூறியதாவது, 
 

தமிழகத்தில் ஊழல் அதிகரித்து விட்டது என அமித்ஷா அதிமுக அரசை மட்டும் குறைசொல்லவில்லை. இதில் ஒரு கட்சியை மட்டும் தனிமைபடுத்தாதீர்கள். அவர் தெளிவாக பேசியுள்ளார். தமிழகத்தில் ஊழலற்ற நேர்மையான, வெளிப்படையான ஆட்சி வேண்டும் என்பதை தான் அவர் கூறியுள்ளார். 
 

 

 

நாடு முழுவதும் ஒரே தேர்தல் என்பதை மக்கள் வரவேற்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு தேர்தல் நடக்கிறது. இதை மக்கள் விரும்பவில்லை. இதனால், ஒரே நேரத்தில் தேர்தல் வருவதை மக்கள் விரும்புகின்றனர். இதை கண்டு பயப்படுவர்களுக்கு அது அவர்களுக்கு சொந்த பயத்தை காட்டுகிறது.
 

 

 

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிக இடங்களில் பா.ஜ., வெற்றி பெறும். சட்டசபை தேர்தலில் ஆளுமையை நிரூபிக்கும். எந்த நேரத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் எதிர்கொள்ள பா.ஜ.க. தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 
 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

விஜயதரணி உள்ளே; பொன்னார் வெளியே! - பாஜகவின் மாஸ்டர் ப்ளான்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Pon Radhakrishnan setback in BJP due to Vijayadharani arrival

கடந்த மூன்று முறையாகத் தொடர்ந்து விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வான காங்கிரஸைச் சேர்ந்த விஜயதாரணி, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் பா.ஜ.க.வில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இது, காங்கிரஸ் ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. விஜயதாரணி, 2021ல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றபோது, சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்ததாகவும், அது கிடைக்காமல் போன பிறகு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியாவது கிடைக்கும் என நினைத்து இலவு காத்த கிளியாக இருந்தார் எனச் சொல்லப்பட்டது. ஆனால், சமீபத்தில் சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் பதவி செல்வப்பெருந்தகைக்கு வழங்கப்பட்டது.

அதேபோல, தமிழக சட்டமன்ற குழுத் தலைவர் பதவி ராஜேஷ்குமாருக்கும் ஒதுக்கப்பட்டது. மேலும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டும் கிடைக்காததால், விஜயதாரணி அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன.

முன்னதாகவே அவர் டெல்லியில் முகாமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது இன்று பிற்பகல் 2 மணிக்கு டெல்லியில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் சுதாகர் ரெட்டி, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் முன்னிலையில் தற்போது விஜயதாரணி பாஜகவில் இணைந்துள்ளார். பொதுவாக சிட்டிங் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பாஜகவில் இணைந்தால் ஜெ.பி.நட்டாவை சந்திப்பது வழக்கம்.

அதேபோல் விஜயதாரணியும் ஜெ.பி.நட்டாவை சந்திப்பார் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இது புதிதாக காங்கிரஸ் மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற செல்வப் பெருந்தகைக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. எவ்வளவோ அணை கட்டிப் பார்த்தும் செல்வப் பெருந்தகைக்கு பிடிகொடுக்காமல் இருந்து வந்த விஜயதாரணி, இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளது. புலி வருது புலி வருது கதையாய், கடந்த ஒரு மாதகாலமாக அரசல்புரசலாக பேசப்பட்டு வந்த விஜயதாரணி கட்சித் தாவல் கதைக்கு தற்போது எண்டு கார்டு போடப்பட்டுள்ளது.

இதன்பிறகு விஜயதாரணி நிருபர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியில் கிடைத்த மோசமான அனுபவத்தால் பா.ஜ.கவில் இணைந்துள்ளேன். பாஜக பாத யாத்திரையால் தமிழக பா.ஜ.கவில் புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது. மோடி தலைமையில் என்னை போன்ற பெண்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைந்தேன். இவ்வாறு அவர் கூறினார். மறுபுறம் பாஜகவின் தமிழக பொறுப்பாளரான அரவிந்த் மேனனை சந்தித்த விஜயதரணி, வரும் லோக்சபா தேர்தலில் சீட்  தரவேண்டும் எனக் கேட்டுள்ளார். அதில் நான் தோற்றுப் போனால் தன்னை ராஜ்யசபா எம்பியாக்க வேண்டும் என டிமாண்ட் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்போது, மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பாக எம்பி சீட் கொடுக்க வேண்டும் எனும் நிர்ப்பந்தம் எழுந்துள்ள நிலையில், மக்களுக்கு நல்ல பரிட்சயமான தலைவராக இருக்கும் பொன் ராதாகிருஷ்ணனுக்கு பாஜக வேறு திட்டங்களை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பாஜகவை கன்னியாகுமரி பகுதியில் வளர்த்தவர் எனும் இமேஜ் தேசியத் தலைமைக்கு இருப்பதால், அவருக்கு கவர்னர் பதவி தேடிவர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னாள் தமிழக கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் கவர்னராக பதவி வகித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் கவர்னர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், பஞ்சாப் கவர்னர் பதவியை பொன் ராதாகிருஷ்ணனுக்கு கொடுக்க இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், இன்னொரு தரப்பினர், மாநிலத் தலைமையுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் பொன்னாரை ஓரங்கட்ட நடக்கும் அரசியல்தான் இது என்றும் கமலாலயத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. மார்ச் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானவுடன் இதற்கெல்லாம் முடிவு கிடைத்துவிடும்.

Next Story

‘என் மண்; என் தேசம்’ - பொன். ராதாகிருஷ்ணன் மகிழ்ச்சி 

Published on 10/10/2023 | Edited on 10/10/2023

 

'My soil is my country' - Pon. Radhakrishnan
கோப்புப் படம் 

 

சென்னையில் பா.ஜ.க. சார்பில் ‘என் மண் என் தேசம்’ எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியைச் சேர்ந்த தமிழ்நாடு பா.ஜ.க.வின் மூத்தத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். 

 

நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “பிரதமர் நரேந்திர மோடியின் உணர்வில் உதித்த மாபெரும் சிந்தனை. இந்த நாட்டின் விடுதலைக்காக, மாண்பைக் காப்பதற்காக, பண்பாட்டை காப்பதற்காக, கலாச்சாரத்தைக் காப்பதற்காக, இந்த மண்ணின் பெருமையைக் காப்பதற்காக எவரெல்லாம் உழைத்தார்களோ அவர்களின் அத்தனை பேர்களின் வாழ்விடங்களில் இருக்கக் கூடிய அவர்களின் கால்பட்ட மண்ணை கலசங்களில் டெல்லிக்கு எடுத்துச் சென்று அதனை எல்லாம் சேர்த்து மாபெரும் நினைவுச் சின்னத்தை எழுப்ப வேண்டும். 140 கோடி மக்களும் வணங்கக் கூடிய பொது இடமாக அதனை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு ‘என் மண்; என் தேசம்’ எனும் இந்த நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி” என்றார். 

 

தொடர்ந்து அவரிடம் பா.ஜ.க. மையக்கூட்டம் குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “இந்த நிகழ்ச்சி (என் மண் என் தேசம்) குறித்து கேளுங்கள் சொல்கிறேன்” என்று தெரிவித்துவிட்டுச் சென்றார்.