G.K. Vasan said Prediction to deceive people

Advertisment

நேற்று (24.03.2021) கன்னியாகுமரி மக்களவை தொகுதி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் கிள்ளியூர் தொகுதியில் அதிமுக சின்னத்தில் போட்டியிடும் தமாகாவேட்பாளரான ஜூட் தேவ் ஆகியோரை ஆதரித்து தொகுதி முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் ஜி.கே.வாசன்.

அப்போது கருங்கல் வந்த ஜி.கே. வாசன் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசியதாவது, “கருத்துக் கணிப்பு மக்களை ஏமாற்றும் கணிப்பு.மக்கள் கணிப்பு, மக்கள் மனதில் இருந்து வெளிவரக்கூடிய உண்மையான கணிப்பு.மக்களின் கணிப்பு தேர்தல் அன்று வெளிப்படும் ஒன்று. மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் தமிழகத்தில் முழுமையாக வந்து சேர்ந்து தமிழகம் வளர்ச்சி அடைந்த மாநிலமாக வரக்கூடிய நல்ல சூழல் உள்ளபோது, நிச்சயமாக ஒத்தக் கருத்துடைய வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள்” என்று அவர் தெரிவித்தார்.