Advertisment

மருத்துவர் சாந்தாவின் உடலுக்கு அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி..! (படங்கள்)

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் சாந்தா(93) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

Advertisment

சென்னை அடையாறு மருத்துவமனை தலைவர் சாந்தா, அப்போலோ மருத்துவமனையில் இதயநோய் சம்பந்தமாக சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று (19 ஜன.) காலை காலமானார்.

Advertisment

மருத்துவர் சாந்தா மறைவையொட்டி பிரதமர் மோடி, முதல்வர்பழனிசாமி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும், விவேக் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள மருத்துவர் சாந்தாவின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கே.பாலகிருஷ்ணன், பா.ஜ.க. மகளிரணியின் தேசியத் தலைவர் வானதி சீனிவாசன், தி.மு.க. சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியம், கலாநிதி மாறன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

cancer institute Doctor
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe