Published on 24/10/2020 | Edited on 25/10/2020

ரஜினிக்கு அரசியல் வேண்டாம் என அவருக்கு நெருக்கமானவர்கள் ஆலோசனை சொல்கிறார்களாம்.
"ரஜினிக்கு நெருக்கமான அமெரிக்க நண்பர் ஒருவரும், ரஜினியின் குடும்ப டாக்டர் ஒருவரும் அவரிடம், உங்கள் உடல்நிலை ரொம்ப முக்கியம். அதோடு, டென்ஷனான அரசியல் சூழல்களால் உங்க இயல்பான-அன்பான மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டிய நெருக்கடி ஏற்படுமென ஆலோசனை சொல்லியிருக்கிறார்களாம்.
அதேபோல் சென்னையிலுள்ள ரஜினியின் நீண்ட கால நண்பர் அமலநாதனும் இதையே அவரிடம் அறிவுறுத்தியிருக்கிறாராம். அதே நேரம், ரஜினிக்குத் தரப்படும் இந்த அறிவுறுத்தலின் பின்னால் தி.மு.க இருப்பதாக உளவுத்துறை சொல்கிறது. அதற்குக் காரணம், அந்த அமெரிக்கா நண்பர் ரஜினிக்கு மட்டுமல்ல; தி.மு.க தலைமைக்கும் மிக நெருக்கமானவராம்.''