Advertisment

க.அன்பழகன் மறைவு... ராமதாஸ், டி.டி.வி.தினகரன் இரங்கல்...

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisment

political leaders on anbazhagan

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

திமுக பொதுச் செயலாளரும், திராவிட இயக்க மூத்த தலைவர்களில் ஒருவருமான க.அன்பழகன் (98) இன்று அதிகாலை 1 மணி அளவில் அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். சளி, மூச்சுத் திணறல் காரணமாக கடந்த 24-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு உடல்நலக்குறைவு காரணமாக அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த சூழலில்இன்று அதிகாலை 1 மணி அளவில் அவர் காலமானார். இந்தச் செய்தி திமுகவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisment

இந்நிலையில் அன்பழகனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "திமுகவின் பொதுச்செயலாளரும், திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவருமான பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன். மிகவும் நேர்மையான அரசியல்வாதிகளில் ஒருவர். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்,"தி.மு.க பொதுச்செயலாளர் பெரியவர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் காலமான செய்தி அறிந்து வருத்தமுற்றேன். தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான அன்னாரது மறைவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

K. Anbazhagan
இதையும் படியுங்கள்
Subscribe