Advertisment

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பதிவிட்ட போலீஸ்காரர் சஸ்பெண்ட்... நாகை எஸ்.பி. அதிரடி

police

Advertisment

பால் வியாபாரிகளையும், பொதுமக்களையும் அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட நாகப்பட்டினம் போலிஸ் ஒருவரை மாவட்ட எஸ்.பி. அதிரடியாக சஸ்பெண்ட் செய்திருப்பது சமுக ஆர்வளர்களும், பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

சாத்தான்குளத்தில் அப்பாவையும், மகனையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைஎன்கிற பெயரில் அடித்தே கொலை செய்த காவல் துறையினரை கண்டித்து நாடே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் பால் விநியோகத்தினபோது, கடுமையாக இருக்கும் காவலர்களின் வீடுகளுக்கு இனி பால் கொடுக்க மாட்டோம் என கூறினர். இதற்கு கடைநிலை காவலரான ரமணன் தனது முகநூலில் சர்ச்சைக்குரிய வகையில், "பால் விற்பனையாளர்கள் யாராக இருந்தாலும் இனி அவங்க வாகனத்தை மறிப்போம், மாஸ்கு இல்லை, வித்தவுட் ஹெல்மெட், வித்தவுட் சீட் பெல்ட் போன்ற வழக்குகளை போட்டு தள்ளுவோம், எங்க லிஸ்ட்ல நீங்க இல்ல ஏன்டா தேவையில்லாம நீங்களே வந்து மாட்டிக்கிறீங்க'' என்பது போல மிரட்டும் தொணியில் அவரது பதிவு அமைந்திருக்கிறது. இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியது. அந்தக் காவலரின் முகநூல் பதிவுகளை கண்ட பலதரப்பட்ட மக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாகை எஸ்பி செல்வ நாகரத்தினம் விளக்கம் கேட்டு மெமோ கொடுத்திருந்தார். இந்தநிலையில் இன்று அவரை சஸ்பெண்ட் செய்திருக்கிறார். சாத்தான்குளம் விவகாரத்தின் மூலம் காவல்துறையின்மீது ஏற்பட்டிருக்கும் வெறுப்பு குறைவதற்குள் சாதாரண கான்ஸ்டபிளின் முகநூல் பதிவு மேலும் எரிச்சலை உண்டாக்கினாலும், மாவட்ட எஸ்.பி. யின் அதிரடி நடவடிக்கை பலரையும் பேச வைத்துள்ளது.

Nagapattinam police police sp suspend
இதையும் படியுங்கள்
Subscribe