Advertisment

தலைமைச் செயலகத்திற்குள் அத்துமீறல்: தங்கதமிழ்செல்வன், வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு!

vettrivel

டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் தங்கதமிழ்செல்வன், வெற்றிவேல் மீது சென்னை கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisment

சென்னையில் நேற்று தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த இருவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது முறைகேடு புகார் தெரிவித்துள்ளனர். நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளில் எடப்பாடி பழனிசாமி உறவினர்களுக்கு தன்னிச்சையாக ஒதுக்கீடு செய்திருப்பதாக தங்க தமிழ்செல்வனும், வெற்றிவேலும் குற்றம்சாட்டியுள்ளனர்.

Advertisment

இதனிடையே, தலைமை செயலகத்துக்குள் செல்ல முயன்ற தங்க தமிழ்செல்வன், வெற்றிவேலை போலீஸ் தடுத்த போது அவர்கள் போலீசாரை மிரட்டி அத்துமீறி நுழைந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சென்னை கோட்டை காவல்துறையினர் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe