ADVERTISEMENT

மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் சோதனை... மதுரையில் தீவிர கண்காணிப்பு...

03:20 PM Jan 13, 2021 | rajavel

ADVERTISEMENT

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பார்வையாளராக பங்கேற்க ராகுல்காந்தி மதுரை வருகையையொட்டி, மோப்ப நாய் உதவியுடன் விழா மேடையில் சோதனை நடத்தினர் காவல்துறையினர்.

ADVERTISEMENT


மதுரை அவனியாபுரத்தில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நாளை (14/01/2021) காலை 8 மணிக்கு தொடங்கி நான்கு மணி அளவில் முடிவடைகிறது. இந்தப் போட்டிகளில் பார்வையாளராக பங்கேற்க காங்கிரஸ் முன்னாள் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி மற்றும் திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

ராகுல் காந்தி வருகையையொட்டி போட்டி நடைபெறும் பகுதி முழுவதும் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. மேலும் போட்டி நடைபெறும் நாளை பிற்பகல் 12 மணிக்கு வருகை தரும் ராகுல்காந்தி, பிற்பகல் 2 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டிகளைப் பார்வையிடுகிறார். பின்னர் தனி விமானத்தில் மீண்டும் டெல்லி செல்கிறார்.

வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகள் மற்றும் போட்டி நடைபெறும் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆய்வு செய்தனர். மேலும் போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளில் முப்பதுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பகுதி முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT