/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ramadoss-in_5.jpg)
பாமக நிறுவனரும் தலைவருமான ராமதாஸ், தனது கட்சியின் மாநில மகளிரணி சங்க துணைச் செயலாளர் புஷ்பா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில் அவர், “திருவண்ணாமலையைச் சேர்ந்த மாநில மகளிர் சங்க துணைச் செயலாளர் புஷ்பா சேகர் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
மகளிர் சங்க செயல்பாடுகளில் தொடக்கம் முதலே புஷ்பா சேகர் ஆர்வம் காட்டிவந்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிக்காகவும், மகளிர் சங்க வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவர். இளம் வயதிலேயேஉடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்ததை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், மகளிர் சங்கத்தினர், திருவண்ணாமலை மாவட்ட பா.ம.க.வினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)