16.07.1989ஆம் ஆண்டு ராமதாஸால் துவக்கப்பட்ட பாமக, இன்று (16.07.2021) தனது 33வது ஆண்டைக் கொண்டாடுகிறது. இதற்காக அக்கட்சித் தொண்டர்களுக்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர், “பாட்டாளி மக்கள் கட்சி அரசியல் களத்தில் 32 ஆண்டுகள் பயணித்து 33வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பா.ம.க.வின் வெற்றிகளுக்கும், சாதனைகளுக்கும் அடிப்படைக் காரணமானபாட்டாளி சொந்தங்களுக்கு இந்த நாளில் எனது வாழ்த்துகள். இனி வெற்றி நமதே! பா.ம.க. போராளிகளின் கட்சி; பா.ம.க. சாதனைகளின் கட்சி.மக்களின் நலனுக்காக பாமக சாத்தியமாக்கிய திட்டங்களும், முறியடித்த அநீதிகளும் ஏராளம். ஆனாலும் ஆள்பவர்களின் கட்சியாக பா.ம.க. மாறுவது எப்போது? நமது அடுத்த இலக்கு அதுவாகவே இருக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.