Skip to main content

“இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை” - பாமக திட்டவட்டம்

Published on 21/01/2023 | Edited on 21/01/2023

 

pmk said No support for anyone parties in Erode East by-election

 

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதான ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வமான வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், திமுக இடைத்தேர்தல் தேர்தல் பணியை தொடங்கிவிட்டது. அந்த தொகுதியில் அதிமுக நேரடியாக போட்டியிட உள்ளதாக இ.பி.எஸ் அணி தெரிவித்திருந்ததது. அதே சமயம்  ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் நாங்களும் போட்டியிடுவோம் என ஓ.பி.எஸ் அறிவித்துள்ளார். மேலும் எங்களது கூட்டனிணி கட்சிகளை நேரில் சந்தித்து ஆதரவு கோரவுள்ளோம் என்றும் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடவும் இல்லை, யாருக்கும் அதரவும் இல்லை என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். மேலும், ஒரு எம்.எல்.ஏ காலமானால் அவர் சார்ந்த கட்சிக்கே அந்த இடத்தை ஒதுக்கிவிட வேண்டும் என்பதே பாமகவின் கொள்கை. இடைத்தேர்தல் என்பதே மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல்தான்” என்றும் கூறியிருக்கிறார். 

 

 

சார்ந்த செய்திகள்