Advertisment

அரசு எடுத்த முட்டாள்தனமான முடிவு... அதிமுக அரசைக் கடுமையாக விமர்சித்த அன்புமணி ராமதாஸ்!

pmk

Advertisment

தமிழக அரசு உத்தரவுப்படி நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியைத் தவிர மற்ற இடங்களில் நேற்று டாஸ்மாக் கடைகள், பல நிபந்தனைகளுடன் திறக்கப்பட்டன. கரோனா தாக்கம் தமிழகத்தில் அதிகமாக உள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேசமயம் ஆன்லைனில் மது விற்பனைக்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளது.

Advertisment

இந்த நிலையில் பா.ம.க.வின் ராஜ்யசபா எம்.பி. அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் டாஸ்மாக் திறப்பு குறித்து கருத்து தெரிவித்து இருந்தார். அதில், "இந்த ஊரடங்கு நேரத்தில் டாஸ்மாக் திறப்பு குறித்து அரசு எடுத்த முடிவு முட்டாள்தனமான முடிவு என்றும் ஏன் இந்தப் போலித்தனமான ஊரடங்கு என்றும் கூறியுள்ளார். அதோடு, கரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக அரசாங்கம் எடுத்த முயற்சிகள் எல்லாம் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதன் மூலம் வீணாகிவிடும் என்றும் கூறியுள்ளார். மேலும் டாஸ்மாக் கடைகளில் சமூக தூரத்தைப் பின்பற்றாமல் லட்சக்கணக்கான மக்கள் வரிசையில் நிற்பதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது என்றும், இதனால் சமூகப் பரவலுக்கு வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளார்.

Speech TASMAC politics anbumani pmk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe