காதல் மற்றும் சாதி மறுப்புத் திருமணம் செய்த இளம்பெண் இளமதியை மர்ம நபர்கள் கடத்திச்சென்றதாக காதல் கணவன் அளித்த புகாரின்பேரில், சேலம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (மார்ச் 16) ஆஜரான அவர், பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அப்போது காவல்துறையினர் இளமதியை சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், நீதிபதி குமரகுரு முன்னிலையில் ஆஜர்ப்படுத்தினர். அப்போது, தனது விருப்பப்படியே பெற்றோருடன் சென்றதாகவும், தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் நீதிபதியிடம் இளமதி வாக்குமூலம் அளித்தார். பின்னர் பெற்றோருடன் அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/688_0.jpg)
தோழர் #சூப்பர்_கதை.
எனக்கே தெரியாம இப்படி ஒரு தங்கச்சி யா?
எனக்கு இப்பவே அவங்கள பார்க்கணும்னு தோணுது.
எங்க Boss இருக்காங்க இப்போ ?
அவங்க பெயர் என்ன?
எப்படி இப்படி டிசைன் டிசைன்ah கதை ரெடி பண்றீங்க.
இன்னும் கொஞ்சம் emotions தேவை.
இன்னும் கொஞ்சம் வேற மாதிரி try பண்ணுங்க.? pic.twitter.com/quvY4E4Fbg
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) March 15, 2020
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இந்த நிலையில் கடத்தப்பட்ட இளமதி எங்கே? என்ற விவகாரம், சமூக ஊடகங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அதோடு மக்களவையில் திமுக எம்பி செந்தில்குமாரும் இளமதியை மீட்க வேண்டும் என்று குரல் கொடுத்தார். திமுக எம்.பி. செந்தில்குமார் மக்களவையில் கேள்வி எழுப்பியதற்கு சமூக வலைத்தளங்களில் ஒருவர் திமுக எம்.பியிடம் இளமதி பற்றி கேள்வி கேட்பது இருக்கட்டும் உன் வீட்டில் ஒரு இளம் பெண் இருந்தது அது இப்ப எங்கே என்று கேள்வி எழுப்பினார். அதற்கு திமுக எம்.பி செந்தில்குமார் பதிலடி கொடுத்துள்ளார். அதில், தோழர் #சூப்பர்_கதை. எனக்கே தெரியாம இப்படி ஒரு தங்கச்சியா? எனக்கு இப்பவே அவங்கள பார்க்கணும்னு தோணுது. எங்க Boss இருக்காங்க இப்போ ? அவங்க பெயர் என்ன? எப்படி இப்படி டிசைன் டிசைன்ah கதை ரெடி பண்றீங்க. இன்னும் கொஞ்சம் emotions தேவை. இன்னும் கொஞ்சம் வேற மாதிரி try பண்ணுங்க என்று குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)