ADVERTISEMENT

பா.ம.க.வின் முக்கிய நிர்வாகிக்கு தி.மு.க.வின் ஐ-பேக் அழைப்பு! 

07:12 PM Aug 29, 2020 | rajavel

ADVERTISEMENT

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த முக்கிய பொறுப்பாளர் ஒருவரை தி.மு.கவின் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், ஐ.பேக் நிறுவனத்தில் பணி புரிய அழைத்திருக்கிறார். இந்த விவகாரம், பா.ம.க -தி.மு.க வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

பா.ம.கவின் துணை அமைப்புகளில் ஒன்று, ’பசுமைத் தாயகம்’! இந்த அமைப்பின் பொதுச் செயலாளராக இருக்கிறார் அருள் ரத்தினம். பா.ம.க.வின் கொள்கைகளையும், பசுமைத் தாயகத்தின் செயல்பாடுகளையும் மக்கள் மன்றத்தில் கொண்டு செல்வதில் தீவிரம் காட்டி வருபவர்.

சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்கான வியூகத்தை வகுத்து தருவதற்காக, பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்துடன் கடந்த வருடம் ஒப்பந்தம் போட்டுக்கொண்டார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். ஐ-பேக் நிறுவனமும் அதற்கான பணிகளை கவனித்து வருகிறது.

இந்த நிலையில், பா.ம.க.வின் பசுமைத்தாயகம் பொதுச் செயலாளர் அருள் ரத்தினத்தை, தி.மு.க.வுக்காக பணி புரிய அழைத்திருக்கிறது ஐ-பேக்!

இதனை தனது முகநூல் பக்கத்தில் அம்பலப்படுத்தியிருக்கும் அருள் ரத்தினம், ‘’ ஒரு சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க.வுக்கு வேலை செய்ய ஒப்புக்கொண்டால், பிரசாத் கிஷோர் பாண்டேவின் ஐ-பேக் நிறுவனத்தில் 9 மாதங்களுக்கு வேலை தருவதாக எனக்கும் அழைப்பு வந்துள்ளது.

பா.ம.க தனித்துப் போட்டியிட்ட 2016 தேர்தலில், சிதம்பரம் தொகுதியில் 24,266 வாக்குகள் எனக்கு விழுந்தன. அங்கு வெறும் 1,506 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க தோல்வியடைந்தது. இந்த ஐ-பேக் அழைப்பு, தானியங்கி முறையில் அனுப்ப படுவதுதான் என்றாலும், தி.மு.க.வை எதிர்க்கும் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் இதை அனுப்புவது நியாயம் தானா?‘’ எனக் கிண்டலாகக் கேள்வி எழுப்பியிருக்கிறார் அருள் ரத்தினம்.

இந்தச் சம்பவம் தற்போது தி.மு.க-பா.ம.க.வில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT