Advertisment

எக்காலத்திலும் அவரை நம்பிடாதீங்க... கலைஞர் கூறியதாக ராமதாஸ் பதிவிட்ட ட்வீட்டால் பரபரப்பு! 

pmk

Advertisment

மறைந்த வன்னியர் சங்க தலைவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான காடுவெட்டி குருவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அரசியல் பயிலரங்கத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காடுவெட்டி குருவின் திருவுருவப் படத்திற்கு, பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அக்கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், துணை பொதுச்செயலாளர் சிவக்குமார், மாவட்டச் செயலாளர் சம்பத் ஆகியோரும் மரியாதை செலுத்தினார்கள். அதேபோல், கல்விக்கோயில் வளாகத்தில் உள்ள குருவின் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டது.

இதனையடுத்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், தி.மு.க. தலைவர் கலைஞரும், நானும் அவரது இல்லத்தில் ஒரு நாள் தனியாக உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு மூத்த அரசியல்வாதியின் பெயரைக் குறிப்பிட்ட கலைஞர், அவரை மட்டும் எந்த காலத்திலும் நம்பி விடாதீர்கள் என்று கூறினார். அவர் யார் என்பதை உங்களின் யூகத்துக்கே விட்டு விடுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். ராமதாஸின் இந்தக் கருத்துஅரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Speech politics kalaingar Ramadoss pmk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe