Advertisment

பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பது உண்மை தான்...உயிர் போனால் வராது...பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடி!

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும்,உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 4,421-லிருந்து 4,789 ஆக உயர்ந்துள்ளது. இதில் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 326 லிருந்து 353 ஆக உயர்ந்துள்ளது.அதேபோல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 114-லிருந்து 124 ஆக அதிகரித்துள்ளது.

Advertisment

pmk

இந்த நிலையில் கரோனா வைரஸ் பரவல் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ளார்.அதில், "ஊரடங்கால் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பது உண்மை தான்.எங்கள் மாநிலத்திற்கு ரூ.2400 கோடி வருமானம் கிடைக்க வேண்டிய நிலையில்,ரூ.6 கோடி மட்டும் தான் கிடைத்துள்ளது.பணம் போனால் அதைச்சம்பாதித்துக் கொள்ளலாம்.ஆனால்,உயிர் போனால் மீண்டும் வராது" என்றும்,"இந்தியா போன்ற போதிய மருத்துவக் கட்டமைப்பு இல்லாத நாடுகளில் கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தான் ஒரே தீர்வு.ஆகவே ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் - திரு. சந்திரசேகர ராவ், (தெலுங்கானா முதலமைச்சர்) கூறியுள்ளார் என்றும்,அதோடு கரோனா வைரஸ் பரவும் நிலையை நான்கு கட்டங்களாகப் பிரிக்க முடியும். இது குறித்து இளைஞர்களுக்குப் புரிதலை ஏற்படுத்தும் நோக்குடன் கீழ்க்கண்ட தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

politics coronavirus Ramadoss pmk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe