நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி... புகையிலை பழக்கம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடி!

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. இன்று மேலும் 31 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதன் மூலம், தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,204 ஆக அதிகரித்துள்ளது. புகையிலையில் உள்ள முக்கிய வேதிப்பொருளால் பலர் புகையிலைபழக்கத்திற்கும் அடிமையாகின்றனர். உலக நாடுகளில் 48 சதவீத ஆண்களும் 22 சதவீத பெண்களும், இந்தியாவில் சுமார் 51 சதவீத ஆண்களும் 3 சதவீதப்பெண்களும் புகைப்பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புகைப் பிடிப்பவர்கள் தங்கள் ஆயுட்காலத்தையும் இழந்துவிடுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கினறனர்.

pmk

இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் புகையிலையின் விளைவுகள் குறித்து கருத்து கூறியுள்ளார். அதில், "நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி, புகையிலைபொருட்களின் உறைகள் மீது ‘புகையிலை வலிமிகுந்த மரணத்தை ஏற்படுத்தும்’ என்ற வாசகமும், வழக்கத்தை விட குரூரமான எச்சரிக்கைப் படத்தையும் வரும் செப்டம்பர் முதல் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும், புகையிலை பழக்கத்தைக்கைவிட விரும்புவோர் "1800-11-2356" என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்ற வாசகத்தை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு ஆணையிட்டிருப்பதும் நல்லது. இதைப் பயன்படுத்தி புகையிலை பழக்கத்திலிருந்து மக்கள் விடுபட வேண்டும்! என்றும் குறிப்பிட்டுள்ளார்.

coronavirus Leader pmk politics Ramadoss Speech
இதையும் படியுங்கள்
Subscribe