உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரசின் பரவலைத் தடுக்க பல்வேறு உலகநாடுகளும் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அந்தவகையில் இந்திய அரசும் பல்வேறு நாடுகள் உடனான விமானப் போக்குவரத்தை நிறுத்தியுள்ளது. இதனால் இந்தியர்கள் பலரும் பல்வேறு நாடுகளில் சிக்கித்தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்து தற்போது உலகம் முழுவதும் சுமார் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கரோனாவால் 2.21 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனால் பலியானோர் எண்ணிக்கை 10,000 ஐ கடந்துள்ளது. சீனாவில் 80,967 பேர் பாதிக்கப்பட்ட இந்த வைரசால் பாதிக்கப்பட்டனர். இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 200 ஐ கடந்துள்ளது.
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் காரோனா வைரஸ் பரவி வருவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், கொரோனா பரவலைத் தடுக்க பிரதமர் அறிவித்துள்ள ஒரு நாள் மக்கள் ஊரடங்கு வரவேற்கத்தக்க நடவடிக்கை. அவரது அறிவிப்பை மதித்து தனித்திருப்போம்... விழித்திருப்போம்.... இதையே அடுத்த 3 வாரங்களுக்கு வாடிக்கையாக மாற்றிக்கொள்ள முயலுவோம் என்றும், தமிழக அரசின் அனைத்து எச்சரிக்கைகள், விழிப்புணர்வு பரப்புரைகளையும் கடந்து மதுக்கடைகளில் கூட்டம் வழிகிறது. மதுக்கடைகள் கொரோனா வைரசை பரப்பும் மையங்களாக மாறி விடக்கூடாது. ஆகவே, மாபெரும் மனிதப் பேரழிவை தடுக்க வசதியாக மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும்! என்றும் கூறியுள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
மேலும், கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் மக்கள் முதல் அரசு வரை அனைவரும் பின்பற்ற வேண்டிய திருக்குறள்.... அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவத அஞ்சல் அறிவார் தொழில், திருக்குறளின் பொருள்: அஞ்ச வேண்டிய விஷயங்களுக்கு அஞ்சமாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பது முட்டாள் தனம். அச்சப்பட வேண்டியவற்றுக்கு அஞ்சுவது அறிவுமிகுந்தவர்களின் வழக்கம்! என்றும் கூறியுள்ளார்.