Advertisment

அவங்களுக்கே அந்த நிலைமையா... அப்படினா நமக்கு... கரோனா வைரஸ் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடி ட்வீட்!

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 லிருந்து 17 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கையும் 694 லிருந்து 724 ஆக உயர்ந்துள்ளது. இதில் இந்தியர்கள் 677 பேர், வெளிநாட்டினர் 47 பேர் என மொத்தம் 724 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 137, மகாராஷ்டிராவில் 130, கர்நாடகாவில் 55 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 43 லிருந்து 67 ஆக அதிகரித்துள்ளது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

pmk

இந்த நிலையில் பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் கரோனா வைரஸ் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், உலகின் ஈடு இணையற்ற வல்லரசான அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அச்சத்தை ஏற்படுத்துகிறது. நேற்று ஒரே நாளில் 17,507 பேரை கொரோனா வைரஸ் நோய் தாக்கியிருக்கிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 256 பேர் கொரோனா வைரஸ் நோய்க்கு பலியாகியுள்ளனர் என்றும், கொரோனா வைரஸ் பாதிப்பில் சீனாவை அமெரிக்கா மிஞ்சியிருக்கிறது. சீனாவில் இதுவரை 81,285 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் இந்த எண்ணிக்கை 85,268 ஆக அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவுக்கே இந்த நிலை எனும் போது நமது நிலை? எனவே விழிப்புடன் இருப்போம், விலகி இருப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட வட மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள மல்லிகை, கனகாம்பரம், சம்பங்கி, சாமந்தி உள்ளிட்ட மலர் வகைகளைப் பறித்தும், கொரோனா அச்சம் காரணமாகச் சந்தைப்படுத்த முடியவில்லை. வாங்க ஆளில்லை. அதனால் டன் கணக்கில் மலர்கள் குப்பையில் கொட்டப்படுகின்றன என்றும், மலர்கள் குப்பையில் கொட்டப்படுவதால் மலர் விவசாயிகள் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக் கணக்கான ரூபாய் இழப்பைச் சந்தித்து வருகின்றனர். அவர்களின் இழப்பை அரசும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதற்காக மலர் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

coronavirus eps pmk politics Ramadoss Speech
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe