Advertisment

டாஸ்மாக் கடையை மூடிய பாமகவினர்... இது பாமகவின் கொள்கை என வாழ்த்து தெரிவித்த ராமதாஸ்!

pmk

Advertisment

தமிழகம் முழுவதும் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசும், மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். 50 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு நீடித்து வருகிறது. நீதிமன்றம் உத்தரவுபடி தமிழகம் முழுவதும் மதுபானக் கடையில் திறக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் டாஸ்மாக் திறப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர்.ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். அதில், புதுவையில் ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட 102 மதுக்கடைகளை சட்டப் போராட்டம் நடத்தி மூடியிருக்கிறார் காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் தேவமணி. அவருக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும். முழுமையான மதுவிலக்கே பா.ம.க.வின் கொள்கை. அதை நோக்கிய நமது பயணம் தொடரும் என்று கூறியுள்ளார்.

Speech politics Ramadoss TASMAC pmk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe