Advertisment

தமிழகமும் அதைச் செய்வது தானே அறிவார்ந்த செயல்... அ.தி.மு.க. அரசுக்கு அட்வைஸ் செய்த ராமதாஸ்!

pmk

Advertisment

தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், பொதுத்தேர்வை ரத்து செய்யகோரிய வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. வழக்கானது ஜூன் 11ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தெலுங்கானாவில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி தேர்வின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு 'கிரேடு' வழங்கவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

இந்த நிலையில் பா.ம.க.நிறுவனர் மருத்துவர். ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், 3,650 நோய்த்தொற்றுகளுடன் கரோனா பாதிப்பில் 14 ஆவது இடத்தில் இருக்கும் தெலுங்கானாவே 10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்யும் போது, 33,229 தொற்றுகளுடன் 2-ஆவது இடத்தில் இருக்கும் தமிழகமும் அதைச் செய்வது தானே மக்கள் நலன் சார்ந்த, அறிவார்ந்த செயலாக இருக்கும்.தெலுங்கானாவில் 10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டிருப்பது காலமறிந்து, மாணவர்கள் உள்ளிட்ட மக்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட பாராட்டத்தக்க முடிவு. தமிழக அரசுக்கும் மக்கள் நலனில் அக்கறை இருக்கும் எனநம்புவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

admk pmk politics Ramadoss Speech
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe