சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்து தற்போது உலகம் முழுவதும் சுமார் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கரோனாவால் 2.76 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனால் பலியானோர் எண்ணிக்கை 11,000 ஐ கடந்துள்ளது. சீனாவில் 80,967 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டனர். மேலும் இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மக்கள் அனைவரும் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

Advertisment

pmk

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்த நிலையில் கரோனா வைரஸ் பரவி வருவது குறித்து தனது ட்விட்டரில்பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "தமிழக முதலமைச்சர் அவர்களே.... மதுக்கடைகளை மூட இன்னும் என்ன தயக்கம்?உடனடியாக செயல்படுங்கள் என்றும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பாலிவுட் பாடகி அளித்த விருந்தில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் துஷ்யந்த் சிங், அதன்பின் நாடாளுமன்ற கூட்டத்திலும், குடியரசுத் தலைவர் மாளிகை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். இதனால் குடியரசுத் தலைவர் முதல் எம்.பி,க்கள் வரை அச்சத்தில் உறைந்துள்ளனர் என்றும், இது போன்ற பொறுப்பற்ற செயல்கள் தான் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணம் ஆகும். இவற்றைத் தடுப்பதற்காகத் தான் அடுத்த 3 வாரங்களுக்கு முழு அடைப்பு மற்றும் ஊரடங்கை செயல்படுத்தும்படி பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்துகிறது" என்றும் தெரிவித்துள்ளார்.