ADVERTISEMENT

இவர்களை பார்த்தால் கவலையாக இருக்கிறது... பாமக நிறுவனர் ராமதாஸ் பதிவிட்ட ட்வீட்!

12:38 PM Mar 11, 2020 | Anonymous (not verified)

சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவைத் தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே பெரும் அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன. இருந்த போதிலும் இதுவரை இந்தியாவிலும் 62 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை இந்திய அரசாங்கம் தற்போது உறுதி செய்துள்ளது. தமிழகத்திலும் சிலருக்கு அந்த பாதிப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT



இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கரோனா வைரஸ் பரவி வருவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி நாட்டின் மிலன் நகரில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 55 பேரை மீட்டு தாயகம் அழைத்து வர மத்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இத்தாலியில் தமிழக மாணவர்களுக்கு, ‘கொரோனா பாதிப்பு இல்லை’ என்ற சான்றிதழ் கிடைப்பதில் ஏற்படும் தாமதம் தான் தாயகம் திரும்ப முடியாததற்கு காரணமாகும். உடனடியாக அவர்களுக்கு மருத்துவ ஆய்வு நடத்தி சான்றிதழ் கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT


மேலும், ஐரோப்பிய நாடுகளில் மிதிவண்டி பயணம் மகிழ்ச்சியானதாக மாறியிருக்கிறது. டென்மார்க்கின் கோபன்கேஹன் நகரம் மிதிவண்டி பயணத்திற்கு ஏற்ற நாடுகளில் முதலிடம் வகிக்கிறது என்றும், அங்கு 62 விழுக்காட்டினர் மிதிவண்டியில் பள்ளி/அலுவலகம் செல்கின்றனர். அங்கு தினமும் 14.30 லட்சம் கி.மீ தொலைவுக்கு மிதிவண்டி பயணம் மேற்கொள்ளப்படுகிறது என்றும், சென்னையில் மிதிவண்டியில் செல்வோரைப் பார்த்தால் மகிழ்ச்சி ஏற்படுகிறது; இரு சக்கர ஊர்திகளில் பறப்போரை பார்த்தால் கவலை ஏற்படுகிறது. சென்னை மிதிவண்டி பயணத்திற்கு ஏற்றதாக மாற வேண்டும். அனைவரும் மிதிவண்டியில் மகிழ்ச்சியாக பயணிக்க வேண்டும். அந்த நாளும் எந்த நாளோ? என்று குறிப்பிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT