கரோனா ஆட்கொல்லி வைரசின் தாக்கம்சீனாவைத் தொடர்ந்து தென்கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதில்உச்சகட்டமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 42,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1637 ஆக உயர்ந்துள்ளது.

Advertisment

pmk

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்த நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதி உலக முட்டாள்கள் தினத்தை முன்னிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இன்று உலக முட்டாள்கள் தினம்தான். ஆனால், நாடு... ஏன் உலகம் இன்றிருக்கும் சூழலில் எவரையும் முட்டாள்களாக்க முயல வேண்டாம். கரோனா அச்சமும், பதற்றமும் விலகும்வரை இத்தகைய அதிர்ச்சி விளையாட்டுகளை ஒதுக்கி வைப்போம். மக்களிடம் நம்பிக்கையை விதைப்போம் என்றும், இராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களுக்கான நிவாரண உதவிகள் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என்றுஅம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதேமுறையை பயன்படுத்தி தமிழ்நாடு முழுவதும் வீடுகளுக்கே சென்று உதவிகளை வழங்குவதற்கான வாய்ப்புகளை அரசு ஆராய வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணி நாளை தொடங்கும் நிலையில், நியாயவிலைக் கடைகளில் கூட்டம் சேருவது தவிர்க்கப்படுவதையும், சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டும். இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.