அதிமுகவிற்கு ராமதாஸ் கொடுத்த ஐடியா... கொள்கையை விட்டுக்கொடுத்த பாமக... ராமதாஸ் பதிவிட்ட ட்வீட்!

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்குவது குறித்தும், தேசிய மக்கள்தொகை பதிவேடு NPR தயாரிப்பு குறித்தும் கருத்து கூறியுள்ளார். அதில், ஒரு கோடிக்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட பெரு நகரங்களில் மகளிருக்கென தனி பிங்க் நிற பேருந்துகள் விடப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. பணி/ பள்ளிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி அனைத்து சிறிய நகரங்களுக்கும் இந்த சேவையை நீட்டிக்க வேண்டும் என்றும், தேசிய மக்கள்தொகை பதிவேடு NPR தயாரிப்பு குறித்த சில அச்சங்கள் போக்கப்படும் வரை அதற்கான கணக்கெடுப்பு நடத்தப்படாது என்று தமிழக அரசும், NPR கணக்கெடுப்பில் ஐயத்திற்கு இடமானவர்கள் என எவரும் அறிவிக்கப்படமாட்டார்கள் என மத்திய அரசும் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதே போல், NPR தயாரிப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் அளித்துள்ள விளக்கங்கள் இஸ்லாமிய சகோதரர்களிடம் நிலவும் அச்சத்தைப் போக்கி, நம்பிக்கையையும், நிம்மதியையும் விதைக்கும் என்றும் நம்புவோம். NPR தயாரிப்பில் சர்ச்சைக்குரிய 3 வினாக்களை மத்திய அரசு நீக்கி அச்சத்தை முழுமையாக போக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

pmk

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

மேலும் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை இலவசங்களை எதிர்ப்பது தான் என்றாலும், பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிகணிணி, இலவச மிதிவண்டி போன்ற பயனுள்ள இலவசங்களை நான் தொடர்ந்து ஆதரித்து வருகிறேன். இத்தகைய இலவசங்கள் தொடர வேண்டும்!தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படும் மடிகணிணி அறிவுத்திறனை வளர்க்கும்; மிதி வண்டி உடற்திறனை வளர்க்கும். இந்த நோக்கத்தை மாணவச் செல்வங்கள் புரிந்து கொண்டு அனைத்து வகை உள்ளூர் பயணங்களுக்கும் மிதிவண்டியை பயன்படுத்த வேண்டும். நோயற்ற வாழ்வை உறுதி செய்ய வேண்டும் என்றும், குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் கைது செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. எரிவதை பிடுங்கினால் கொதிப்பது நின்று விடும். அதேபோல், மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால் இதற்கெல்லாம் தேவையிருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

admk eps pmk politics Ramadoss Speech
இதையும் படியுங்கள்
Subscribe