Advertisment

பா.ம.க., துணை அமைப்பு நிர்வாகிகள் கூட்டம்!

பா.ம.க., துணை அமைப்பு நிர்வாகிகள் கூட்டம் தைலாபுரத்தில் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.

Advertisment

ramadoss

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பாட்டாளி இளைஞர் சங்கம் உள்ளிட்ட துணை அமைப்புகளின் மாவட்ட, மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வரும் 5-ஆம் தேதி காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்க வளாகத்தில் அமைந்துள்ள மாங்கனி அரங்கில் இந்தக் கூட்டம் நடைபெறும். பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முன்னிலையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்திற்கு பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்கிறார். பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர்கள், மாவட்ட செயலர்கள் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். பாட்டாளி மக்கள் கட்சியின் துணை அமைப்புகளில் பாட்டாளி இளைஞர் சங்கம், பாட்டாளி மகளிர் சங்கம், பாட்டாளி இளம்பெண்கள் சங்கம், பாட்டாளி மாணவர் சங்கம் ஆகியவற்றின் மாநில செயலாளர்கள், மாநில துணை செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisment

பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட கட்சி வளர்ச்சிப் பணிகள் தொடர்பான முடிவுகளை செயல்படுத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவிருக்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்.

statement Leader pmk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe