Advertisment

பாமக தலைவர் அன்புமணி முதல்வர் ஸ்டாலின் திடீர் சந்திப்பு

PMK leader Anbumani's surprise meeting with Chief Minister Stalin

Advertisment

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். என்.எல்.சி. உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து முதல்வருடன் அன்புமணி பேசியதாகத்தகவல் வெளியாகியுள்ளது. மேலும்கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ், “எம்.பி.சி பிரிவில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு சம்பந்தமாக முதலமைச்சரை குழுவாக சந்தித்தோம். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு எம்.பி.சியை மூன்றாக பிரித்து வன்னியர்களுக்கு 10.5%மும் சீர் மரபினருக்கு 2.5%மும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 7% என்று அந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது உச்சநீதிமன்றம். அதற்கு அவர்கள் சரியான தரவுகள் இல்லை என காரணம் சொன்னார்கள். அதன்பிறகு கடந்தாண்டு பிசி கமிஷன் மீது தமிழக அரசு முக்கிய நடவடிக்கை எடுத்தது.

அதன் தொடர்ச்சியாக இந்தாண்டு ஜனவரி மாதத்தில் 20% எம்.பி.சி சம்பந்தமாக உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ப ஒரு அரசாணையை அரசு வெளியிட்டது. அதில் பிசி கமிஷன் மூன்று மாதத்தில் எம்.பி.சி சம்பந்தமான தரவுகளை சேகரித்து தமிழக அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவிப்புவெளியிட்டார்கள். மூன்று மாதத்தில் ஒரு மாதம் கடந்துள்ளது. அதை இன்னும் வேகப்படுத்தி இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கு ஏதுவாக அதைக் கொண்டு வரும்படி கோரிக்கை வைத்துள்ளோம்.

Advertisment

தமிழ்நாட்டில் இரு சமுதாயங்கள் மிக பின் தங்கிய நிலையில் உள்ளது. தலித் சமுதாயம் மற்றொன்று வன்னியர் சமுதாயம். இந்த இரு சமுதாயங்களும் தமிழ்நாட்டில் மக்கள் தொகையில் 40%. இந்த 40% மக்கள் முன்னேறினால் தமிழகம் முன்னேற்றம் அடையும். இந்த அடிப்படையில் தான் இந்த பிரச்சனையை எடுத்துள்ளோம். இது யாருக்கும் எதிரானது கிடையாது” எனக் கூறினார்.

anbumani
இதையும் படியுங்கள்
Subscribe