இதனால் என்ன பயன்... அச்சமாக இருக்கிறது... எடப்படியால் அதிருப்தியான அன்புமணி ராமதாஸ்! 

இந்தியாவில் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை 9 பேர் ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 492 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு மாநில அரசுகளும் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். அந்த வரிசையில் தமிழகத்திலும் இன்று (24/03/2020) மாலை அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் அரசு அறிவித்த 144 தடை உத்தரவும் இன்று மாலை 06.00 மணி முதல் அமலுக்கு வருகிறது.இதனால் தமிழகத்தில் உள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களும் அரசின் அறிவுறுத்தலின் பேரில் ஊழியர்களுக்கு விடுப்பு, வீட்டில் இருந்தே பணிபுரிய ஊழியர்களுக்கு அனுமதி அளித்துள்ளனர்.

pmk

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்நிலையில் அரசின் இந்த நடவடிக்கை குறித்து பாமகவின் ராஜ்யசபா எம்.பி அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இன்றுமுதல் 31 ஆம் தேதி வரை 144 தடை ஆணை பிறப்பிக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். இது வரவேற்கத்தக்கது. ஆனாலும் பொது இடங்களில் மக்கள் கூடுவதை முழுமையாக தடுக்க அரசு வகை செய்யப்படாதது ஏமாற்றம் தருகிறது. கடந்த 4 நாட்களில் கொரோன நோய்ப்பரவல் 165% அதிகரித்திருக்கிறது. இது அச்சமளிக்கும் வேகம். அதனால்தான் நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு 19 மாநிலங்கள் ஊரடங்கைச் செயல்படுத்தி வருகின்றன. தமிழகத்திலும் மக்கள் எவரும் வெளியில் வராத வண்ணம் தடுத்தால் தான் கரோனா நோயைத் தடுக்க முடியும். எனவே தமிழகத்திலும் முழுமையான ஊரடங்கைச் செயல்படுத்த வேண்டும். 144 தடை சட்டத்தினால் ஓரளவு மட்டும் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது நோய் பரவலைத் தடுக்க உதவாது" எனத் தெரிவித்துள்ளார்.

admk anbumani ramadoss eps pmk politics
இதையும் படியுங்கள்
Subscribe