ADVERTISEMENT

எப்படி வேண்டுமானாலும் எதிர்கொள்ள நாங்கள் தயார்: சிவசங்கருக்கு பாமக பதில்...

06:20 PM Sep 19, 2019 | rajavel

ADVERTISEMENT

குரு நினைவு மண்டப விழாவில் பேசிய ராமதாஸ் குருவை திமுக கொலை செய்ய முயற்சித்தது என குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு பதில் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு, ''குருவை கொல்ல தி.மு.கவினர் திட்டம் தீட்டியிருந்தால், குரு எப்படி தி.மு.க கூட்டணியில் போட்டியிட முன் வந்திருப்பார்?'' உள்ளிட்ட சில கேள்விகளையும் எழுப்பியிருந்தார் அரியலூர் திமுக மாவட்ட செயலாளர் சிவசங்கர்.

ADVERTISEMENT



சிவசங்கரின் அறிக்கைக்கு பின்னர் பாமக துணை பொதுச்செயலாளர் வைத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், 17.09.2019 அன்று காடுவெட்டியில் ஜெ.குருவின் மணிமண்டப திறப்பு விழா நடைபெற்றது. அதில் ராமதாஸ், திமுகவைப் பற்றி பேசினார். இதற்கு அரியலூர் மாவட்ட வாரிசு அரசியல்வாதி ஒருவர் பதில் கூறியுள்ளார். இருந்தாலும் அவரின் கேள்விக்கு நான் சில கேள்விகளையும் முன்வைக்கிறேன்.

ஜெ.குருவை முதன் முதலில் 149 நாட்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது திமுகதான். 2011 -ம் கூட்டணி எப்படி அமைந்தது என்று அவருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஜெயங்கொண்டம் தொகுதி பாமக-வுக்கு ஒதுக்கப்பட்டு ஜெ.குரு போட்டியிட்டார். ஆனால் கலைஞரே யங்கொண்டம் தொகுதி பாமக-வுக்கு என்று அறிவித்தும் திமுக நிர்வாகிகள் ஒரு சிலர் சரிவர தேர்தல் பணி செய்யவில்லை. அதையும் மீறி குரு வெற்றி பெற்றார்.


இவ்வளவு காலம் கழித்து இக்குற்றச்சாட்டை இப்போது ஏன் கூற வேண்டும் என்று வினா எழுப்பியுள்ளார். இவ்வினாவிற்கான பதிலை ராமதாஸ் 2008ம் ஆண்டே கூறிவிட்டார்.

குரு மறைந்த பிறகு பல வதந்திகளையும், அவதூறுகளையும் வாரி இறைத்தார்கள். இந்த சூழ்ச்சிகளை உணர்ந்த வன்னியர்கள் இவர்களது குற்றச்சாட்டுகளை இம்மியளவும் ஏற்காமல் மணிமண்டப திறப்பு விழாவில் கலந்து கொண்டார்கள். இதை சட்டப்படியும் சரி, இல்லை எப்படி வேண்டுமானாலும் எதிர்கொள்ள நாங்கள் தயார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.




ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT