style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
பாமக யோசனையை ஏற்ற தமிழக அரசுக்கும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் டுவீட்டர் பக்கத்தில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ள நடவடிக்கைகள் அனைத்தும் பயனுள்ளவை. நோய்ப் பாதிப்பை தடுப்பதற்காக தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்!
கொரோனா வைரஸ் தடுப்புக்காக பாட்டாளி மக்கள் கட்சி தெரிவித்த அனைத்து யோசனைகளையும் தமிழக அரசு ஏற்றுக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.