மறைந்த பாமக முன்னாள் எம்எல்ஏவும், வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி குருவின் சகோதரி மீனாட்சி மற்றும் குருவின் மகன் கனலரசன் ஆகியோர் சென்னையில் உள்ள பத்திரிகையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள், குருவின் மரணம் இயற்கையானது அல்ல. அன்புமணியின் வளர்ச்சிக்கு குரு தடையாக இருப்பதாக கருதினார்கள். குருவிற்கு எதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும்? அவர் இறந்துவிடுவார் என கூறினர். மேலும், குருவை சூழ்நிலைக் கைதியாக பாமகவினர் வைத்திருந்ததாகவும், பாமக தலைமைக்கு வன்னியர் சமுதாயம் உரிய பதிலை சொல்லும் என்று கனலரசன் கூறினார்.