Advertisment

சென்னைக்கு வெடி விபத்து ஆபத்து -ராமதாஸ் ட்வீட்!

ramadoss

சென்னையிலுள்ளகிடங்கு ஒன்றில் வைக்கப்பட்டுள்ள அமோனியம் நைட்ரேட்டால் வெடி விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது என்றும், அதனை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

அவரது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை துறைமுகத்தை ஒட்டிய கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் எனும் வெடிமருந்து 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. லெபனான் நாட்டின் மிகப்பெரியவெடிவிபத்து ஏற்பட்டதற்கு இந்த வெடிமருந்து தான் காரணமாகும்!

Advertisment

சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட்டால் அதேபோன்ற வெடிவிபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. அதைத் தடுக்க சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட் வெடிமருந்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி, உரம் தயாரிப்பு போன்ற பிற தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Ramadoss twitter
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe