Advertisment

தருமபுரியில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி தோல்வி!

pmk candidate Soumya Anbumani failed in Dharmapuri

Advertisment

18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. மாலை 5 மணியளவிலான நிலவரப்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 293 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 233 இடங்களிலும், மற்றவை 17 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. திமுக கூட்டணி அணைத்து இடங்களிலும் முன்னிலை வகித்து வருவதால் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகளைப் பகிர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. முன்னதாக தருமபுரி, விருதுநகரில் கடும் இழுபறி நீடித்த நிலையில், திமுக கூட்டணி தற்போது முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில் தருமபுரியில் திமுக வேட்பாளர் மணி வெற்றி் பெற்றுள்ளார். அதே வேளையில் காலை முதல் முன்னிலை வகித்து வந்த பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி இறுதி சுற்றுகளில் தனது வெற்றி வாய்ப்பை இழந்தார். இதன் மூலம் தருமபுரி மக்களவைத் தொகுதியில் கடும் போட்டிக்கு இடையே திமுக வேட்பாளர் மணி வெற்றி பெற்றுள்ளார்.

dharmapuri pmk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe