ADVERTISEMENT

''32 ஆண்டுகள் ஆகியும் ஆட்சிக்கு வராதது வருத்தமளிக்கிறது...''-பாமக அன்புமணி ராமதாஸ் பேச்சு

05:34 PM May 01, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டத்தில் மே ஒன்று உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ''மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் 55 ஆண்டுகாலம் இரண்டு கட்சிகள் மட்டும் தமிழ்நாட்டில் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறது. 55 ஆண்டு காலம் என்றால் அது அரை நூற்றாண்டு. ஒரு நீண்ட காலம். ஏன் வேறு யாரும் ஆட்சி செய்யக் கூடாதா? யாருக்கும் தகுதி இல்லையா? நமக்கு என்ன தகுதி இல்லை. எல்லா தகுதியும் நமக்கு இருக்கு. நமக்கு செயல்திட்டம் இருக்கு. எல்லாவற்றுக்கும் மேல் வேகத்தோடும் எழுச்சியோடும் கோடிக்கணக்கான எனது தம்பிகள் இருக்கிறார்கள். எந்த கட்சியிலாவது இவ்வளவு இளைஞர்கள் இருக்கிறார்களா? எந்த கட்சியிலும் கிடையாது. நமது மிகப்பெரிய பலம் இளைஞர்கள். அந்த மாற்றத்தை எல்லோரும் சேர்ந்து கொண்டுவர வேண்டுமென்று மே தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த தினம் நம்முடைய தினம்தான். இது பாட்டாளிகளுடைய தினம், தொழிலாளர்களுடைய தினம். காரணம் நாம் எல்லோரும் அடித்தட்டு மக்கள், உழைக்கின்ற மக்கள். எனக்கு இதில் சின்ன வருத்தம் என்னவென்றால் திமுக தொடங்கி 18 வருடத்தில் ஆட்சிக்கு வந்துவிட்டது.

1949 ஆம் ஆண்டு அண்ணா அவர்களால் தொடங்கப்பட்ட திமுக 1967ல் ஆட்சிக்கு வருகிறார்கள். அதிமுக 1972-ல் தொடங்கி ஐந்து ஆண்டுகளில் ஆட்சிக்கு வருகிறது. ஆனால் நாம் கட்சி தொடங்கி 32 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் ஆட்சிக்கு வர முடியாத சூழல் இருக்கிறது. அதில் எனக்கு மிகப்பெரிய வருத்தம் இருக்கிறது. நம்மிடம் எல்லாமே இருக்கு. எல்லா தகுதிகளும் இருக்கு. எல்லா திறமைகளும் இருக்கு. செயல் திட்டத்திலிருந்து நவீன திட்டம், தொலைநோக்கு திட்டம், தமிழ்நாடு அடுத்த ஐந்தாண்டுகளில் எப்படி இருக்கவேண்டும், அடுத்த பத்தாண்டுகளில் எப்படி இருக்கவேண்டும், அடுத்த 50 ஆண்டுகளில் தமிழ்நாடு எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் தொலைநோக்கு திட்டங்கள் நம்மிடம் இருக்கிறது. அதை செயல்படுத்த அந்த அதிகாரம் நம்மிடம் இல்லை. எனக்கு பதவி ஆசை எல்லாம் ஒன்றும் கிடையாது. அதுவும் குறிப்பாக எனக்கு பதவி ஆசை இல்லை. 35 வயதில் மத்திய அமைச்சராக்கி என்னை டெல்லிக்கு அனுப்பி வைத்தீர்கள். டெல்லியில் எல்லாத்தையும் நான் பார்த்துட்டேன். டெல்லியில் மட்டுமல்ல உலகத் தலைவர்கள் எல்லாரையும் பார்த்து விட்டேன். எல்லாமே அத்துபடி எனக்கு. அதனால் எனக்கு பதவி ஆசை நிச்சயமாக கிடையாது. என்னுடைய நோக்கம் நீங்கள் முன்னேற வேண்டும். உங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டும். வேலைக்குப் போக வேண்டும். தமிழ்நாடு முன்னேற வேண்டும்''என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT