மக்களவை மற்றும் மாநிலங்களிவையில் காஷ்மீருக்கான சிறப்பு சட்டம் 370 உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சலுகைகளை மத்திய அரசு நேற்று நீக்கியது. மேலும், மாநில அந்தஸ்து நீக்கப்பட்டு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு திமுக, காங்கிரஸ் உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் மோடி அடுத்த ஒரு திட்டத்தை அறிவிக்க ரெடியாகி விட்டார் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

bjp

Advertisment

Advertisment

இது பற்றி விசாரித்த போது, அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மதமாற்ற எதிர்ப்பு மசோதாவைக் கொண்டு வரக்கூடும் தகவல் தெரிவித்துள்ளன. இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த மசோதா எந்தவிதமான மத மாற்றத்தையும் தடுக்கும் என்று கூறிவருகின்றனர்.