Advertisment

ஜெயலலிதா, ஓ.பி.எஸ். படங்கள் இல்லாத பழனிசாமியின் பேனர்..!

pictures  of Jayalalithaa, O.P.S. Palanisamy's banner

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் படத்தையும், தற்போதைய துணை முதல்வர் ஓ.பி.எஸ். படத்தையும் தவிர்த்து பல இடங்களில் பேனர்கள் வைத்துள்ள திருச்சி அ.தி.மு.க.வினர்.

Advertisment

வழக்கமாக கட்சிக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக எந்த அமைச்சர்கள் வந்தாலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படமும், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் படம், துணை முதல்வர் ஓ.பி.எஸ். படமும் பதிவிடப்பட்டு இருக்கும்.

Advertisment

ஆனால், திருச்சி அ.தி.மு.க.வில் ஏற்பட்டிருக்கக் கூடிய சில கருத்து முரண்பாடுகளும் உட்கட்சிப் பூசலும் இன்று திருச்சிக்கு வருகை தந்த முதல்வருக்கு வரவேற்பு அளிக்கும் விதமாக அவருக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களில் ஜெயலலிதா, ஓ.பி.எஸ். படங்களை நிராகரித்துள்ளனர். அதேசமயம் வைத்திலிங்கம், அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி உள்ளிட்டவர்களின் படங்களை மட்டும் வைத்து பேனர்கள் சாலைகளில் வைக்கப்பட்டுள்ளது. இது அங்கு அ.தி.மு.க.வினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ops edappadi pazhaniswamy trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe