/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/thiruma_79.jpg)
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மீது சமூக வலைத்தளத்தில் அவதூறு தகவல்களை பதிவிட்ட நபரை கைது செய்யக்கோரி, அக்கட்சியினர் திருச்சி மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்சி கரூர் மண்டல செயலாளர் தமிழாதன் தலைமையில் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வீ. வருண் குமாரிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், ‘விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான, தொல். திருமாவளவன் மீது, சமூக வலைத்தளங்களில் அவரது நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாகவும் அவதூறு தகவல்களை பதிவிட்டுள்ளனர்.
அவ்வாறு பதிவிட்ட நபரை கண்டறிந்து கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் போது வி.சி.க மாவட்டச் செயலாளர்கள் லாரன்ஸ், கனியமுதன், இளம்சிறுத்தைகள் பாசறையின் மாநிலத் துணைச் செயலாளர் அரசு, நிர்வாகி யாசர் அராபத், பெரியசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)