ADVERTISEMENT

இந்த மனுவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிட வேண்டும்... ஆட்சியரிடம் மனு கொடுத்த காங்கிரஸ் கமிட்டியினர்!! 

05:48 PM Jun 04, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தி அறிவுறுத்தலின்படி மத்திய அரசு 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசியை இலவசமாக வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளார். அதனடிப்படையில் குடியரசுத் தலைவர் மத்திய அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவை திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் குடியரசு தலைவருக்கு, இந்த மனுவை அனுப்பிட வேண்டி திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மனு கொடுத்தனர்.

ADVERTISEMENT

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாநகர தலைவர் ஜவகர் பேசுகையில், “மத்தியில் இருக்கும் பாஜக அரசு கரோனாவை தடுப்பதற்கு ஒரே வழி தடுப்பூசி தான் என்பதை அறிவுறுத்தி வருகிறது. ஆனால் அந்த ஊசியை அனைத்து மாநிலங்களுக்கும் எந்த விலையும் இல்லாமல் வழங்குவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது நாட்டிலேயே மிகப் பெரிய ஊசி தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அந்தந்த மாநிலங்களுக்கு உரிய தடுப்பூசிகள் வழங்கப்படுவதில்லை, மாநில அரசே தடுப்பூசிகளை நேரடியாக கொள்முதல் செய்து கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கூறியிருக்கிறது.

இதனால் மாநில அரசுகள் மிகப்பெரிய நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. எனவே இதை எல்லாம் மத்திய அரசு கவனத்தில் கொண்டு உடனடியாக மாநில அரசுகளுக்கு உதவ வேண்டும். அனைத்து மக்களுக்கும் தடுப்பூசிகள் போய் சேர வேண்டும்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த மனுவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புமாறு திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மனு கொடுத்தனர். இதில் திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாநகர தலைவர் ஜவஹர், தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ்,வடக்கு மாவட்ட தலைவர் கலை ஆகியோர் உடன் இருந்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT