Skip to main content

மக்கள் நீதி மய்யம் பேச்சாளர்கள்!

Published on 01/03/2018 | Edited on 01/03/2018
makkal

 

மக்கள் நீதி மய்யத்திற்கு பேச்சாளர்களை நியமித்து கமல்ஹாசன் அறிவிப்பு செய்துள்ளார்.  

 

மக்கள் நீதி மய்யத்திற்கு பேச்சாளர்களாகன் மௌர்யா, பாரதி கிருஷ்ணகுமார், கமீலா நாசர், கு.ஞானசம்பந்தன், முரளி அப்பாஸ், ரங்கராஜன், சிவராமன், சௌரிராஜன், ஸ்ரீபிரியா, ராஜ்குமார், சிநேகன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

‘கொலைகார யானையை விட எங்க பகுதிதான் கெடைச்சதா’ - அரிக்கொம்பனை எதிர்க்கும் களக்காடு மக்கள்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

 'Is our area worse than a killer elephant' - Kalakadu people against Arikompan

 

தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்குள் புகுந்த அரிக்கொம்பன் யானை பல்வேறு நாட்களாக வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்த நிலையில், தற்பொழுது பிடிக்கப்பட்ட யானை மணிமுத்தாறு களக்காடு வனப்பகுதிக்குள் விடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

கடந்த 7 நாட்களுக்கு முன்பு தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்குள் புகுந்த காட்டு யானையான அரிக்கொம்பன் சில நாட்களாகவே வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்தது. மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில் யானையானது கம்பம் அருகே உள்ள சண்முகா அணை பகுதியில் புகுந்தது. தொடர் முயற்சியின் பலனாக ஒரு வழியாக மயக்க ஊசி செலுத்தப்பட்டு யானை பிடிக்கப்பட்டது.

 

தொடர்ந்து யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். வனத்துறையின் வாகனத்தில் ஏற்றப்பட்ட அரிக்கொம்பனுக்கு வெப்பத்தை தணிக்கும் வகையில் வனத்துறை ஊழியர்கள் தண்ணீரை பீய்ச்சு அடித்தனர். தொடர்ந்து நெல்லை மணிமுத்தாறு களக்காடு வனப்பகுதியில் யானையானது விடப்பட இருக்கிறது.

 

அகத்தியமலை யானைகள் காப்பகத்தின் ஒரு பகுதியான மணிமுத்தாறு வனப்பகுதிக்குள் தற்பொழுது யானை விடப்பட்டுள்ளது. கடந்த ஏழு நாட்களாக சுற்றித்திரிந்த அரிக்கொம்பன் யானை தற்பொழுது ஒரு வழியாக பிடிபட்டு அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது மக்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது. இருப்பினும் கேரளாவில் 8 பேரை கொன்ற யானையை களக்காடு பகுதியில் விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 'கொலைகார யானையை விடுவதற்கு எங்க பகுதிதான் கெடைச்சதா. மேல விட்ட யானை இன்னும் ஒரு மணிநேரத்தில் கீழ வந்திரும்' எனக் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

 

Next Story

மதுபான கூடம் அடித்து நொறுக்கம்... பொறுத்தது போதுமென பொங்கியெழுந்த பொதுமக்கள்!!

Published on 08/01/2022 | Edited on 08/01/2022

 

Crushing the bar ... people who got up in a rage!

 

விருதுநகரில் மக்களின் தொடர் போராட்டத்தை மீறி செயல்பட்ட தனியார் மதுபான கூடம் பொதுமக்களாலேயே அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள அன்னபூர்ணயாபுரம் அருகே தனியார் மதுபான கூடம் ஒன்று சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட அன்றிலிருந்தே அப்பகுதி மக்கள் அந்த மதுபான கூடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அருகிலேயே பள்ளி மற்றும் கோவில்கள் இருப்பதால் உடனடியாக தனியார் மதுபானக்கூடம் மூடப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்திவந்த நிலையில் எதிர்ப்பை மீறி மதுபான கூடம் செயல்பட்டு வந்தது. இது தொடர்பாகப் போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் கொடுக்கப்பட்டது.

 

Crushing the bar ... people who got up in a rage!

 

Crushing the bar ... people who got up in a rage!

 

இப்படி பல முயற்சிகள் எடுத்தும் அந்த மதுபானக்கூடம் மூடப்படாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அந்த தனியார் மதுபான கூடத்தை செங்கற்களால் அடித்து நொறுக்கினர். 50 ஆயிரம் ரூபாய் பெறுமானமுள்ள மதுபாட்டில்கள், சிசிடிவி கேமராக்கள் அடித்து நொறுக்கப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் மண்ணெண்ணெய் கேனுடன் அடித்து நொறுக்கப்பட்ட மது கூடத்தின் முன் பொதுமக்கள் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த வெம்பக்கோட்டை தாசில்தார், காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதோடு  அடித்து நொறுக்கப்பட்ட மது கூடத்திற்கு சீல் வைத்தனர்.