People's Justice Center preparing for 2024 elections; Kamahasan consultation with district secretaries

Advertisment

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் கூட்டணி மற்றும் பல தேர்தல் விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

நாடாளுமன்றத்தேர்தலுக்கான கூட்டணி குறித்து சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் ஹோட்டலில் மக்கள் நீதி மய்யமாவட்டச் செயலாளர்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் பணிகளை மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் வெகு தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று கமல்ஹாசன் கூறியதாகத்தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை செய்த தவறுகளை இந்த முறை மேற்கொள்ளக்கூடாது என்றும் செயலாளர்களுக்கு கமல்ஹாசன் ஆலோசனை வழங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், “நாடாளுமன்றத்தேர்தல் குறித்தஆலோசனைக் கூட்டம்,உள்விவகாரம்,பூத் கமிட்டி வைப்பது குறித்தபேச்சுவார்த்தை நடந்துகொண்டு இருக்கிறது. கூட்டணி குறித்தவிவாதங்கள் நடக்கும் அதை விவாதிக்க முடியாது” எனக் கூறினார்.